தொழிற்சாலைக்குள் சிறுத்தை தொழிலாளர்கள் அச்சம்
குன்னுார்: குன்னுார் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்குள் புகுந்த சிறுத்தையால் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். நேற்று அதிகாலை தொழிற்சாலை வளாகத்தில் புகுந்த சிறுத்தை அங்குள்ள நாயை துரத்தி சென்றது. நாய் தப்பியது. இது தொடர்பாக இரவு காவல் பணியில் உள்ளவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து, வனத்துறைக்கு அளித்த புகாரின் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். இப்பகுதியில், கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணித்து நடவடிக்கை எடுக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.