உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மகளிர் குழுவினருக்கு ரூ.40 கோடியில் கடன் உதவி

மகளிர் குழுவினருக்கு ரூ.40 கோடியில் கடன் உதவி

ஊட்டி; மகளிர் குழுவினருக்கு, 40 கோடி ரூபாய் கடன் உதவியை, அரசு தலைமை கொறடா வழங்கினார். ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கிக்கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் தலைமை வகித்து பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கி பேசியதாவது: நீலகிரியில் ஊரகப்பகுதிகளில், 204 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 22.23 கோடி ரூபாய்; நகர்புற பகுதிகளில், 161 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 48.47 கோடி ரூபாய் என, 368 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 40.70 கோடி ரூபாய் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி கிளைகளின் வாயிலாக வங்கி கடன் வழங்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் விவசாயம், தேயிலை மற்றும் காபிதோட்டம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதார தொழில் மேம்பாட்டிற்காக கடன் வழங்கப்படுகிறது. மகளிர் குழுக்கள் தகுந்த முறையில் இதனை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி