உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  நீலகிரி மாவட்டத்தில் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை

 நீலகிரி மாவட்டத்தில் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை

கோத்தகிரி: நீலகிரி மாவட்டத்தில் வரும், 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நீலகிரி மாவட்டத்தில் ஸ்ரீ எத்தையம்மன் பண்டிகை நடைபெறும் வரும், 7ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முடிச்சட்டம், 1881ன் கீழ் வராது என்பதால், உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் போது, மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்பான அவசர அலுவலகங்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இதற்கு பதிலாக, ஜன., 24ம் தேதி (சனிக் கிழமை) அன்று மாவட்டத்தில் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ