ஐயப்பன் கோவிலில் வரும் 14ல் மகர விளக்கு
கோத்தகிரி; கோத்தகிரி ஐயப்பன் கோவிலில், 14ம் தேதி மகர விளக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.கோத்தகிரி கடைவீதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் நாள்தோறும் காலை, மாலை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், வரும், 14ம் தேதி கோவிலில் மகரவிளக்கு பூஜை நடக்கிறது. இதனை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு நடைதிறப்பு; 6:30 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து ஐயப்பனுக்கு அபிேஷகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும். மாலை, 6:00 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.