மேலும் செய்திகள்
பெண் பர்ஸை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்கள்
16-Sep-2024
ஊட்டி : 'சேரிங்கிராசில், 12 ஆட்டோக்கள் நிறுத்தி இயக்க ஆவன செய்ய வேண்டும்,' என, பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.மகளிர் ஆட்டோ ஓட்டுனர் உமா தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: சேரிங்கிராஸ் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எதிர்புறத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஆட்டோ நிறுத்தம் உள்ளது. 12 ஆட்டோக்கள் நிறுத்தி இயக்கப்படுகிறது. அங்கு, 6 பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் படித்த வேலையில்லாத பட்டதாரிகளால் இயக்கப்படுகிறது. 'ஊட்டி நகராட்சி நிர்வாகம் ஆட்டோ நிறுத்தத்தில், 5 ஆட்டோக்கள் மட்டும் நிறுத்தி இயக்க வேண்டும்; அதற்கு மேல் அங்கு ஆட்டோக்கள் நிறுத்த கூடாது,' என, நிர்பந்தம் செய்கிறது.ஆட்டோ தொழிலை நம்பியுள்ள பெண் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பெண் ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 12 ஆட்டோக்கள் நிறுத்தி இயக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
16-Sep-2024