உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / யானை தாக்கி இறந்ததாக கூறப்பட்டவர், துப்பாக்கி சூட்டித்தில் பலி: 13 பேர் கைது

யானை தாக்கி இறந்ததாக கூறப்பட்டவர், துப்பாக்கி சூட்டித்தில் பலி: 13 பேர் கைது

நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவர்சோலை அருகே, கடந்த 25ல், ஜம்ஷித் என்பவர் காட்டு யானை தாக்கி இறந்ததாக, அப்பகுதியினர் தெரிவித்தனர். ஆனால், போலீஸ் விசாரணையில் வன விலங்கு வேட்டைக்கு சென்றபோது துப்பாக்கி தோட்டா பயந்து அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஜம்ஷித்துடன் வேட்டைக்கு சென்ற 4 பேர் உட்பட, 13 பேரை இன்று போலீசார், கைது செய்தவுடன், 3 நாட்டுத் துப்பாக்கி கன், 2 கார்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை பகுதியை சேர்ந்தவர் ஜெம்ஷித்,37. தேவர்சோலை பேருராட்சி இளைஞர் காங்., தலைவராக இருந்த இவர், 25ம், தேதி அதிகாலை காட்டு யானை தாக்கி உயிரிழந்ததாக கூறப்பட்டது. அவரின் உடலை சிலர் கூடலுார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். சம்பவம் நடந்த இடத்தில் தேவர்சோலை போலீசார் மற்றும் வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.ஆய்வில், அப்பகுதியில் அவரை யானை தாக்கியது குறித்த எந்த அடையாளமும் தென்படவில்லை. இதனால், சந்தேகம் மரணம் என, வழக்கு பதிவு செய்யப்பட்ட தீவிர விசாரணை நடந்தது.வேட்டைக்கு சென்ற போது பலிஅதில், ஜெம்ஷித் உட்பட 5 பேர், 24ம் இரவு வன விலங்கு வேட்டைக்கு சென்ற போது, ஜெம்ஷித் வயிற்று பகுதியில் துப்பாக்கி குண்டு துளைத்த காயத்துடன் இறந்துள்ளார்; அவருடன் சென்ற, 4 பேர் தலைமறைவானதாக தெரியவந்தது.இதை தொடர்ந்து, கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், தேவாலா டி.எஸ்.பி., சரவணகுமார், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், துரைராஜ், சாகுல் அமீது மற்றும் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு தலை மறைவானவர்களை தேடும் பணி நடந்தது.துப்பாக்கிகள் பறிமுதல்: 13 பேர் கைதுஅதில், வேட்டைக்கு சென்ற நவ்சாத்,35, ஜாபர்அலி,43, ஐதர்அலி,59, சதீஷ்,37, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவிய, ரபிக்,37, உஸ்மான்,50, ஜினேத், 30, அன்வர், 42, ஜெம்ஷித், 28, சபீக், 24, ஜெஷிம்,28, அன்ஷாத்,26, சாதிக்அலி,32, ஆகியோரையும் கைது செய்தனர்.போலீசார் கூறுகையில்,' இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், வன விலங்கை வேட்டையாட நடந்த துப்பாக்கி சூட்டில் ஜெம்ஷித் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து அவர் உயிரிழந்துள்ளார். அப்போது, அவருடன் சென்ற நான்கு பேர், அப்பகுதியை சேர்ந்த, 9 பேரை அழைத்து, அவர் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.இது தொடர்பாக, 13 பேர், கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து, 3 நாட்டு துப்பாக்கிகள், இரண்டு சொகுசு கார்கள், தோட்டாக்கள், வெடி பொருட்கள், கத்தி, டார்ச் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டுள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ