உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது இருவர் தலைமறைவு

பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது இருவர் தலைமறைவு

மஞ்சூர்:மஞ்சூரில் வனத்துறை ரேஞ்சரை நிருபர் என்று கூறி பணம் கேட்டு மிரட்டிய புகாரில் நிருபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.இது குறித்து மஞ்சூர் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கூறுகையில், மஞ்சூர் பகுதியில் நிருபர் என்று கூறி பாபு, சுரேஷ்குமார், செந்தில்குமார் ஆகிய 3 பேர் வனத்துறை அலுவலர்கள் மற்றும் மரம் வியாபாரம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் கான்ட்ராக்டரிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்து வருவதாக குந்தா ரேஞ்சர் சீனிவாசன், மஞ்சூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினோம். பணம் கேட்டு மிரட்டியது விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பணம் கேட்டு மிரட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, நிருபர் செந்தில்குமாரை இன்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள பாபு, சுரேஷ்குமார் ஆகிய இருவரை தேடி வருகிறோம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ