எம்.டி.எம்.எ., போதைப் பொருள் கடத்தல்: ஒருவரிடம் விசாரணை
கூடலூர்: கர்நாடகா மாநிலத்திலிருந்து கேரளா சென்ற அரசு பஸ்ஸில் இன்று(பிப்.,03) கேரளாவுக்கு கடத்த முயன்ற 600 கிராம் எம்.டி.எம்.எ., என்ற விலை உயர்ந்த போதைப் பொருளை கடத்திய கேரளா பாண்டிக்காட்டை சேர்ந்த முகமதுசபீர், 32, என்பவனை நீலகிரி மாவட்டம் கூடலூர் போலீசார் கைது செய்து போதைப் பொருளை கைப்பற்றினர். போலீசார் மேலும் போதைப் பொருள் கடத்தல் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.