| ADDED : ஜன 29, 2024 11:56 PM
ஊட்டி;ஊட்டி கணபதி தியேட் டர் சாலை குப்பை தொட்டியில், மருத்துவ கழிவுகள் கொட்டுவதால், துாய்மை காவலர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட, பல்வேறு பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதற்கு தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அன்றாடம் வெளியேறும் குப்பைகள், நகராட்சி நிர்வாகம் சார்பில், அகற்றப்பட்டு, மறு சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது.மேலும், நகரில் உள்ள தனியார் கிளினிக்குகளில் இருந்து வெளியேறும் மருத்துவ கழிவுகள், அதற்கென உள்ள பிரத்யேக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு அழிப்பது வழக்கம். ஆனால், சமீப காலமாக இந்த நடைமுறை கையாளப்படுவதில்லை.மாறாக, சில கிளினிக்குகளில் இருந்து வெளியேறும் பயன்படுத்தப்பட்ட 'சிரிஞ்சு, கையுறை, பயன்படுத் திய மாஸ்க், ரத்தம் படிந்த பஞ்சு மற்றும் உடைந்த மருந்து குப்பிகள்,' உள்ளிட்ட மருத்துவ கழிவுகள், கணபதி தியேட்டர் சாலையில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் உள்ளன.இதனால், துாய்மை காவலர்கள், பொதுமக்கள், கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, நகராட்சி நிர்வாகம் இப்பகுதியை ஆய்வு செய்து, விதிமீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக் வேண்டும்.