புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கம்
ஊட்டி; ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நடந்தது. வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, கல்வி உதவி தொகை, வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 180 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், 11 பயனாளிகளுக்கு சீர்மரபினருக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடந்த பேரிடர் மேலாண்மை தொடர்பாக நடந்த பயிற்சியில் பங்கேற்ற, 5 தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள இரண்டு நபர்களுக்கு, 17 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் மாவட்டத்தில், 5 புதிய மினி பஸ்கள் இயக்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், உட்பட பலர் பங்கேற்றனர்.