உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  விலங்குகள் நடமாடும் 91 ஓட்டு சாவடிகளில் கண்காணிப்பு பணி

 விலங்குகள் நடமாடும் 91 ஓட்டு சாவடிகளில் கண்காணிப்பு பணி

கூடலுாரில் யானை உட்பட விலங்கு நடமாட்டம் உள்ள, 91 ஓட்டுச்சாவடிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில், 254; குன்னுார், 244; கூடலுார் 238 ஒட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிக்கு ஓட்டுபதிவு இயந்திரம் அனுப்பும் பணிகள் நேற்று நடந்தது. அதில், கூடலுார் தொகுதியில் வனத்தை ஒட்டி அமைந்துள்ள, 91 ஓட்டுச்சாவடிகள் காட்டு யானை உட்பட பிற விலங்குகள் நடமாட்டம் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சாவடிகளில் வன ஊழியர்கள், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இரவு கண்காணிப்பு பணியில், போலீசுடன் உடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'கூடலுாரில் வனத்தை ஒட்டி அமைந்துள்ள ஓட்டுச் சாவடிகளில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வன ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதிகளுக்கு ரோந்து வாகனங்களும் இயக்கப்படும். வாக்காளர்கள் ஓட்டுச் சாவடிக்கு வரும் வழியில் யானைகள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால், அவர்களை ஓட்டுச் சாவடிக்கு அழைத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றனர். - நிருபர் குழு-:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை