உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காலை நேர பனிப்பொழிவு கடும் குளிரான காலநிலை

காலை நேர பனிப்பொழிவு கடும் குளிரான காலநிலை

பந்தலுார் : பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் காலை, 9:00 மணி வரை கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால்,குளிரான காலநிலை உள்ளது. மேலும், இரவு மற்றும் காலை நேரங்களில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டத்தையும் அறிய முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டுனர்கள் தங்கள் வாகனங்களை இயக்க முடியாமல், மிதமான வேகத்தில் கவனத்துடன் இயக்க வேண்டிய கட்டாயம் தொடர்கிறது. காலை நேர குளிரான காலநிலை தோட்ட தொழிலாளர்களை சிரமப்படுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ