உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலை ரயில் இயக்கம்: 126வது ஆண்டு விழா

மலை ரயில் இயக்கம்: 126வது ஆண்டு விழா

குன்னுார்; நீலகிரியில் மலை ரயில் இயக்கம் துவங்கி, 126வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, குன்னுாரில், சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.கடந்த 1854ல், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை மலை ரயில் பாதை மற்றும் ரயில் நிலையம் கட்டப்பட்டு, 1899ல், ஜூன்,15ல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இதனையொட்டி, நீலகிரி மலை ரயில் ரத அறக்கட்டளை சார்பில், நேற்று, 126வது ஆண்டு மலை ரயில் தினம், குன்னுார் மலை ரயில் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து, குன்னுார் வந்த மலை ரயில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.தற்போது, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 6.7 கோடி ரூபாய் மதிப்பில், புதுப்பிக்கப்பட்டு வரும் குன்னுார் மலை ரயில் நிலையத்துடன், பாதுகாக்கப்பட்ட மரத்தின் புகைப்படம் வைத்து, சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மலை ரயில்ரத கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில், ''யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மலை ரயில் பாரம்பரியம் மாறாமல் தற்போதும் இயங்கி வரும் நிலையில், குன்னுார் பணிமனையில் உள்ள சுற்றுலா பயணிகள் காட்சி அறையை திறந்து சுற்றுலா பயணிகளுக்கு தெரியும் வகையில் போர்டுகள் வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறப்பு மலை ரயில்கள் இயக்க வேண்டும்,''என்றார். நீலகிரி மக்கள் நற்பணி மய்யம் கவுரவ தலைவர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி