மேலும் செய்திகள்
மேக மூட்டமான காலநிலை; சுற்றுலா பயணிகள் 'குஷி'
14-Oct-2024
பந்தலுார் : பந்தலுார் பஜாரில் நெடுஞ்சாலைத்துறை கொட்டிய, பாறை துகள்களில் இருந்து துாசு பரவாமல் இருக்க, நெல்லியாளம் நகராட்சி தண்ணீர் தெளித்தது மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. தமிழக - கேளர இணைப்பு சாலையில் அமைந்துள்ள பந்தலுார் சாலை முழுமையாக சேதமடைந்துள்ளது.இதனை முறையாக சீரமைப்பதற்கு பதில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் குழிகளில் கற்களை கொட்டி, அதன் மீது பாறை துகள்களை கொட்டி கண் துடைப்பு பணி மேற்கொண்டனர். நான்கு முறை இதே முறையில் பணி மேற்கொண்டாலும், மழை பெய்யும் போது தண்ணீரில் இவை அனைத்தும் அடித்து சென்று மீண்டும் குழிகளாக மாறிவிடுகிறது. தற்போது, சாலை ஓரங்களில் தீபாவளி விற்பனைக்காக அதிக அளவில் தற்காலிக கடைகள் செயல்பட துவங்கி உள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வெயிலான காலநிலை நிலவி வருவதால், வாகனங்கள் செல்லும் போது, பாறை துகள்கள் புழுதியாக மாறி வியாபாரிகளை பாதிப்படைய செய்துள்ளது. இதை தொடர்ந்து, நெல்லியாளம் நகராட்சி சார்பில் குடிநீர் லாரியில் தண்ணீரை நிறைத்து, சாலை முழுவதும் ஊற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மக்கள் கூறுகையில், 'நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ள வேண்டிய பணியை, நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.உள்ளூர் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் செய்வதில் அலட்சியம் காட்டும் நகராட்சி, செலவு செய்து இதுபோல் சாலையில் தண்ணீரை ஊற்றி மக்கள் வரி பணத்தை வீணாக்கி வருகிறது. இதனை தவிர்க்க சாலையை தரமாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.
14-Oct-2024