தேசிய டேக்வாண்டா போட்டி; பதக்கம் வென்ற மாணவர்கள்
ஊட்டி; பஞ்சாப்பில் தேசிய அளவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் ஊட்டியை சேர்ந்த, 8 மாணவர்கள் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். ஊட்டியில் உள்ள டேக்வாண்டோ பயிற்சி பள்ளியில் பயிலும், 8 மாணவர்கள் கடந்த ஆக., மாதம் 16,17 ஆகிய தேதிகளில் தேசிய அளவில் பஞ்சாபில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் பங்கேற்றனர். இதில், 8 மாணவர்களும் வெற்றி பெற்றுள்ளனர். 5 பேர் தங்கமும், 3 பேர் வெள்ளியும் வென்று அசத்தியுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழ் கோப்பையுடன் பயிற்சி பள்ளிக்கு வந்தபோது அவர்களின் பெற்றோர் வரவேற்றனர்.