ஊட்டியில் காங்., சார்பில் தேச ஒற்றுமை பாத யாத்திரை
ஊட்டி : ஊட்டியில் காங்., சார்பில் தேச ஒற்றுமை பாதயாத்திரை நடந்தது.நீலகிரி மாவட்ட காங்., சார்பில், ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ராஜிவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, அங்கிருந்து பாதயாத்திரை தொடங்கியது. ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், மாநில எஸ்.டி., பிரிவு தலைவர் பிரியா நாஷ்மிகர், மாநில பொது செயலாளர் விவேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பாத யாத்திரை பேரணி லோயர் பஜார், மணிக்கூண்டு, காபி ஹவுஸ், கமர்சியல் சாலை வழியாக சேரிங்கிராஸ் பகுதியை அடைந்தது. சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், ஊட்டி நகர தலைவர் நித்ய சத்யா, மாவட்ட பொதுச்செயலாளர் ரவிக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் ரகுசுப்பன், கமலசீராளன் உட்பட பலர் பங்கேற்றனர்.