இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டம்
குன்னுார்: இயற்கை பாதுகாப்பு மற்றும் வாகன பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தொடர் ஓட்டம் நடந்தது. குன்னுார் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை காவல்துறை சார்பில் கல்லார் பகுதியில் இருந்து, குன்னுார் வரை விழிப்புணர்வு தொடர் ஓட்டம் நடந்தது. நிதீஸ்வரன், 27 கி.மீ துாரம், ஆஷிகா 17 கி.மீ., துாரம் மித தொடர் ஓட்டம் நடத்தினர். மேலும், பலர் பங்கேற்று ஓடினர். நிகழ்ச்சியில், குன்னுார் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், காவலர் பண்ணாரி முன்னிலை வகித்தனர். அதில், இயற்கை பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, ஹெல்மட் அணிவதன் அவசியம், வாகனங்கள் மித வேகம், இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.