மேலும் செய்திகள்
பயனில்லாத குடிநீர் சுத்திகரிப்பு கருவி
31-Aug-2024
குன்னுார் : குன்னுார் அளக்கரை கிராமத்தில், 500 வீடுகளுக்கு மின் சப்ளை பாதிப்பின்றி வழங்கும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர் திறக்கப்பட்டது.குன்னுார் அருகே எடப்பள்ளி மின்வாரிய அலுவலகத்துக்கு உட்பட்ட அளக்கரை கிராமத்தில், 15 புதிய மின் கம்பங்கள் நிறுவப்பட்டு, 63 கே.வி.ஏ.,- 11 கே.வி., டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதனை, நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் தலைமை வகித்து திறந்து வைத்தார்.உதவி செயற்பொறியாளர்கள் ஜான்சன் (குன்னுார்), கலையரசி (ஜெகதளா ) மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர். இந்த டிரான்ஸ்பார்மர் அமைத்ததால், 500 வீடுகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
31-Aug-2024