உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உறுப்பினர் பெயரில் கடன் பெற்று ஏமாற்றியதாக தலைவி மீது புகார்

உறுப்பினர் பெயரில் கடன் பெற்று ஏமாற்றியதாக தலைவி மீது புகார்

ஊட்டி : 'உறுப்பினர்கள் பெயரில் கடன் பெற்று ஏமாற்றிய தலைவி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என முட்டிநாடு ஹெத்தையம்மன் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த குழுவை சேர்ந்த ஜெயந்தி, கீதா, ராதா, ஆலம்மா, மிச்சி, பார்வதி ஆகியோர் நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: முட்டிநாடு ஹெத்தையம்மன் மகளிர் சுய உதவிக்குழு தலைவராக உள்ளவர் சாந்தி. இவர் குழுவின் கணக்குகளில் பல குளறுபடிகள் செய்துள்ளார். குழு உறுப்பினர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை வட்டிடன் கொடுப்பதாக, கடந்த 2008ம் ஆண்டு ஊர் தலைவர்கள் முன்னிலையில் எழுதி கொடுத்தார். மேலும்,வங்கியில் உறுப்பினர்கள் பெயர்கள் மற்றும் கையெழுத்தை பயன்படுத்தி அருவங்காடு கனரா வங்கியில் 1 லட்சம் ரூபாய் தனிப்பட்ட முறையில் கடன் பெற்றுள்ளார். இது குறித்து கொலகொம்பை போலீசார் விசாரித்த போது, 'அது தனிபட்ட கடன்; உறுப்பினர்களுக்கு சம்பந்தம் இல்லை,' என கூறியுள்ளார். இந்த கடனை திரும்ப செலுத்தவில்லை. இதனால், கடன் மற்றும் வட்டி உயர்ந்ததால், பணம் திரும்ப செலுத்த வேண்டும் என வங்கி மேலாளர் சுய உதவி குழுவினரை வற்புறுத்தி வருகிறார். இது குறித்து சாந்தியிடம் கேட்டபோது, 'வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்தால் நான் பார்த்து கொள்கிறேன்,' என அலட்சியமாக தெரிவிக்கிறார். எனவே, சாந்தி மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு தொகையை வங்கியில் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்