மேலும் செய்திகள்
'இலக்கு' வைத்து விற்கப்படும் 'சரக்கு'
09-Sep-2025
குன்னுார்; குன்னுார் ஜெயின் திருமண மண்டபத்தில், 'முதல்வரின் முகவரி' திட்டத்தின் கீழ் நடந்த முகாமில், 195 பயனாளிகளுக்கு 2.25 கோடி ரூபாய் மதிப்பிலான நல திட்ட உதவி வழங்கும் விழா, அரசு கொறடா ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. விழாவில், நீலகிரி எம்.பி., ராஜா பேசுகையில்,''மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமை, 1970ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் துவங்கப்பட்டது. மாவட்டத்தில், '5 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள், 35 கிராம ஊராட்சிக்கு உட்பட்ட வார்டுகள்,' என, மொத்தம், 146 முகாம்கள் நடத்த முடிவு செய்து, இதுவரை, 138 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 62,000 மனுக்கள் பெறப்பட்டதில், 42,000 மனுக்கள் தீர்வு காணப்பட்டதுடன், மற்றவை பரிசீலனையில் உள்ளன. வரும் மாதங்களில் விடுபட்ட நபர்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்,'' என்றார். கூடுதல் கலெக்டர் சங்கீதா, குன்னூர் நகராட்சி தலைவர் சுசீலா, துணைதலைவர் வாசிம்ராஜா, குன்னுார் தாசில்தார் ஜவகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
09-Sep-2025