உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 95 ஆயிரம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை: போக்குவரத்து கழக மண்டல தலைவர் ஆதங்கம்

95 ஆயிரம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை: போக்குவரத்து கழக மண்டல தலைவர் ஆதங்கம்

ஊட்டி : ஊதிய ஒப்பந்த கோரிக்கைகளை அமல்படுத்த கோரி போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி., சங்கத்தினர், ஊட்டி பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மண்டல தலைவர் தங்கதுரை தலைமை வகித்தார். மண்டல பொதுச்செயலாளர் சையது இப்ராஹீம், பொருளாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மண்டல தலைவர் தங்கதுரை கூறியதாவது:கடந்த, 2003ம் ஆண்டு ஏப்.,1ம் தேதிக்கு பின், பணியில் சேர்ந்த, 95 ஆயிரம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் இல்லை. 21 ஆண்டுகள் தாண்டியும் ஓய்வூதியம் சம்பந்தமாக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, மத்திய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத்தை அறிவித்துள்ளது.இதன் வாயிலாக தற்போது நான்கு வகையான ஓய்வூதியம் உள்ளது. ஆனால், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் இல்லை. எனவே, ஓய்வூதியம் பெற இதுவே சரியான சமயமாகும். ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தப்பட்டுள்ளது. கோர்ட்டு உத்தரவிட்டு அகவிலைப்படி வழங்கப்படவில்லை. மற்ற அரசுத்துறை ஊழியர்களுக்கு இணையான அனைத்து கோரிக்கைகளையும் போக்குவரத்து துறை ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும்.' இவ்வாறு அவர் கூறினார். கவுரவ தலைவர் குணசேகரன், துணை பொது செயலாளர் நசீர், நிர்வாகிகள் முருகேசன், ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை