மேலும் செய்திகள்
பி.ஜி.வி., பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
24-Aug-2024
குன்னுார் : குன்னுார் ராணுவ பகுதியில், பிளாஸ்டிக் மற்றும் துரித உணவுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து கன்டோன்மென்ட் பள்ளி மழலையரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், 'ஹி சேவா 4.0' பிரசார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்று, குன்னுார் ராணுவ பகுதியான பேரக்ஸ் வணிக வளாக பகுதியில், வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வெலிங்டன் கன்டோன்மென்ட் ஆரம்ப பள்ளி குழந்தைகளின், நாடகம், நடனம் உள்ளிட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது.இதில், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகள் மற்றும், துரித உணவுகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேடமணிந்த மழலையர் நடனமாடி அசத்தினர். தொடர்ந்து நடந்த பேரணியில், துாய்மை இந்தியா, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியை சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி, முன்னாள் துணை தலைவர் வினோத் குமார் துவக்கி வைத்தனர். ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியை இமாகுலேட், ஆசிரியர்கள் சித்ரா, எலைட் மரியா, கோமதி, ஜெயசுதா ஆகியோர் செய்திருந்தனர்.
24-Aug-2024