உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வடகிழக்கு பருவமழை; மணல் மூட்டைகள் தயார்

வடகிழக்கு பருவமழை; மணல் மூட்டைகள் தயார்

கோத்தகிரி : கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையின் போது, பேரிடரை தவிர்க்க முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில், ஆறு வட்டங்களில் மழை காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய, 283 பகுதிகள் கண்டறியப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பதற்காக, 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க ஏதுவாக, 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.தவிர, அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உள்ளடக்கிய அனைத்து வட்டங்களிலும், 3,500 முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும், 200 பேரிடர் கால நண்பர்களுக்கு, பேரிடர் பயிற்சி வழங்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளனர். பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க, 1077 கட்டணம் இல்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ