உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாநில எல்லையில் இ-பாஸ் குறித்து பல மொழிகளில் அறிவிப்பு பலகை

மாநில எல்லையில் இ-பாஸ் குறித்து பல மொழிகளில் அறிவிப்பு பலகை

கூடலுார் ; கூடலுாரை ஒட்டிய கேரளா கர்நாடக எல்லை யில் இ-பாஸ் குறித்து, மலை யாளம், ஆங்கிலம், கன்னடம் -மொழிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின், சுற்றுச்சூழலை பாதுகாக்க, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பி ற மாநிலங்களில் இருந்து, தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' கழிவுகள் எடுத்து வருவதை தடுக்க, கூடலுாரை ஒட்டிய மாநில எல்லைகளில், தற்காலிக ஊழியர்களை நியமித்து, வாகனங்களில், பிளாஸ்டிக் சோதனை செய்த பின் வாகனங்களை அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில்,சோதனையின் போது, சுற்றுலா பயணிகள் பலர், 'தடை குறித்து எங்களுக்கு தெரியாது' என, ஊழியர்களிடம், அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க, நீலகிரியில் பிளாஸ்டிக் தடை, இ- பாஸ் குறித்து மாநில நுழைவாயில் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு படும்வகையில், தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் மொழிகளில் அறிவிப்பு பலகை வைக்கப் பட்டுள்ளது. அறிவிப்பு பலகை வைத்திருப்பதை வரவேற்றுள்ள சுற்றுலா பயணிகள், 'அதில், எழுத்துக்கள் மிகவும் சிறிதாக இருப்பதால், படிப்பது சிரமமாக உள்ளது, ' என, தெரிவித்தனர். சுற்றுலா பயணிகள் கூறுகையில்,'நீலகிரியில் பிளாஸ் டிக் தடை, இ----பாஸ் கட்டாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க தொடர்பான தடைகள் குறித்து, ஆங்கிலத்துடன் மலையாளம் அல்லது கன்னடத்தில் அறிவிப்பு பலகை வைத்திருப்பது வரவேற்கக் கூடியது. அதில், எழுத்துக்கள் சிறிதாக இருப்பதால், படிக்க சிரமமாக உள்ளது. பெரிய எழுத்துக்களுடன் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை