உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுாரில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீஸ்; கட்சியினர் கடைகளையும் அகற்ற வலியுறுத்தல்

குன்னுாரில் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீஸ்; கட்சியினர் கடைகளையும் அகற்ற வலியுறுத்தல்

குன்னுார்; குன்னுார் வி.பி., தெரு மவுன்ட்ரோடு ஆக்கிரமிப்புகள் அகற்ற கடைக்காரர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கும் பணி துவங்கியது. குன்னுார் மார்க்கெட் கடைகள் இடித்து கட்ட நகராட்சி முடிவு செய்துள்ளது. முன்னதாக, 'இதன் அருகிலுள்ள, வி.பி., தெரு, மவுண்ட் ரோடு ஆக்கிரமிப்பு கடைகளை வரும், 25ம் தேதிக்குள் தாங்களாகவே அகற்ற வேண்டும்; அகற்றாத பட்சத்தில் நகராட்சி சார்பில் அகற்றப்பட்டு அதற்கான தொகையும் அவர்களிடமே வசூலிக்கப்படும்,' எனவும், கமிஷனர் இளம்பரிதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், நகராட்சி சார்பில் நகர திட்ட ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். கடைகளில் இல்லாதவர்களுக்கு கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில், சில கடைக்காரர்கள் நகராட்சி ஊழியர்களை முற்றுகையிட்டு, வாக்குவாதம் செய்தனர். அப்போது, சிறு வியாபாரிகள் கூறுகையில், 'ஆக்கிரமிப்பு அகற்றினால், அரசு கட்சிக்காரர்கள்; சாதாரண மக்கள் என்ற பாகுபாடு காட்டாமல் அகற்ற வேண்டும். தீபாவளி முடியும் வரை கடைகளை அகற்ற வேண்டாம். குன்னுார் அரசியல் கட்சியினர் ஆதரவில் நடக்கும் பல ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய பிறகு இங்கு வந்து அகற்ற வேண்டும்,'என்றனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம், தெரிவிப்பதாக ஊழியர்கள் தெரிவித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி