உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பாஸ்டியர் நிறுவன வளாகத்தில் சோலை மரக்கன்று நடும் விழா

பாஸ்டியர் நிறுவன வளாகத்தில் சோலை மரக்கன்று நடும் விழா

குன்னுார் : குன்னுார் பாஸ்டியர் நிறுவன வளாகத்தில் சோலை மரக்கன்று நடவு செய்யப்பட்டது.குன்னுாரில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாஸ்டியர் நிறுவனத்தில், 'சுவச்தா ஹி சேவா' மற்றும் தமிழ்நாடு பசுமை தினம் ஆகியவற்றை முன்னிட்டு, மரக்கன்று நடும் விழா நடந்தது. அதில், விக்கி, பெரு நாவல், சிறு நாவல் உட்பட பல்வேறு மரக்கன்று பாஸ்டியர் நிறுவன வளாக பகுதியில் நடவு செய்யப்பட்டது.விழாவில், பாஸ்டியர் நிறுவன உதவி இயக்குனர் டாக்டர் பிரேம்குமார், டாக்டர்கள் ஜெகநாதன், சிவானந்தா சேகர் உட்பட அதிகாரிகள் மரக்கன்று நடவு செய்தனர். வனச்சரகர் ரவீந்திரநாத், வனவர்கள் ராஜ்குமார், திலீப் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ