மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
07-Feb-2026
அரசு பள்ளியில் பல்லுயிர் பெருக்க விழிப்புணர்வு
20-Feb-2026
கோத்தகிரி: கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலைப் பள்ளியில், டெல்லி நிதி ஆயோக் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மத்திய அரசின் நிதி ஆயோக் துறையின் உயர் அலுவலர் தமன்னா தலைமையில் பள்ளி வகுப்பறைகள், சுற்றுப்புறம், சமையல் கூடம், கழிவறை மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, கிராம சுகாதாரம் சார்ந்து பள்ளியில் செயல்படும் சுகாதார பணிகள் செயல்பாடுகள் ஆகியவை கேட்டறியப்பட்டு, பள்ளி துாய்மை பணி, மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில புலமையுடன், உயர் கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ஆய்வின் போது, தொகுதி வளர்ச்சி அலுவலர் அபிநிதி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் உட்பட ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
07-Feb-2026
20-Feb-2026