மேலும் செய்திகள்
பாலியல் வன்கொடுமை குற்றவாளி கைது
23-Jul-2025
பாலக்காடு; பாலக்காடு அருகே, இயற்கைக்கு மாறாக, சிறுவனுக்கு பாலியல் தொல்லை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி கொப்பம் ஆமயூர் பகுதியை சேர்ந்தவர் முகமதுராபி, 40, இவர், கடந்த 17ம் தேதி இரவு ஆமயூர் பகுதியில், 15 வயது சிறுவனை இழுத்து சென்று, இயற்கைக்கு மாறான பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக, சிறுவனின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில், கொப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார், முகமது ராபியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
23-Jul-2025