| ADDED : டிச 27, 2025 06:37 AM
ஊட்டி: ஊட்டியில் துவங்கிய குறும்பட விழாவில், 48 நாடுகளில், 102 குறும்படங்கள் திரையிடப்பட உள்ளது. ஊட்டியில் கடந்த, 2016ம் ஆண்டு முதல், ஊட்டி குறும்பட விழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டின் குறும்படவிழா, தோடர் பழங்குடியின மக்கள் வாழும் பகல்கோடு மந்து, 'சூட்டிங்' மட்டம் பகுதியில் நேற்று காலை நடந்தது. விழாவை, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, மாவட்ட எஸ்.பி., நிஷா ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். ஊட்டி குறும்பட விழா தலைவர் முகமது பரூக் முன்னிலை வகித்தார். இம்முறை, 48 நாடுகளை சேர்ந்த 102 குறும்படங்கள் வரும், 28-ம் தேதி வரை, சூட்டிங் மட்டம் சுற்றுலா தளத்தில் திரையிடப்படவுள்ளன. கலெக்டர் லட்சுமிபவ்யா கூறுகையில்,'' தற்போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள், 'சூட்டிங்' மட்டம் பகுதியில் குறும்படங்களை இலவசமாக கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது,'' என்றார். முன்னதாக, தோடர் பழங்குடியின மக்களின் படுகர் நடனம் இடம்பெற்றது.