உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வாகனங்களில் அதிக பாரம்; ரூ.12.75 லட்சம் அபராதம்

வாகனங்களில் அதிக பாரம்; ரூ.12.75 லட்சம் அபராதம்

பாலக்காடு; லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய வாகன சோதனையில், அதிக பாரம் ஏற்றி வந்த, 15 கனரக வாகனங்களுக்கு, 12.75 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். கல் குவாரிகளில் இருந்து, டிப்பர் லாரிகளில் அதிகளவு பாரம் ஏற்றி இயங்குவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், டி.எஸ்.பி., பென்னி ஜேக்கப் தலைமையிலான, லஞ்ச ஒழிப்புத் துறையினர், வேலந்தாவளம், ஆலத்துார், பட்டாம்பி, மங்கலம் அணை ஆகிய பகுதிகளில் டிப்பர் லாரிகளை சோதனையிட்டனர். அப்போது, அப்பகுதிகள் வழியாக அதிக பாரம் ஏற்றி வந்த, 15 கனரக வாகனங்களுக்கு, 12,75,906 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி