ஊராட்சி பள்ளி நுாற்றாண்டு விழா முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு
கூடலுார்,; கூடலுார் ஹெல்த்கேம் பகுதியில் செயல்பட்டு வரும், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நுாற்றாண்டு விழாவில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்று பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.கூடலுார் ஹெல்த்கேம் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 1925 செப்., 7ல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி துவங்கப்பட்டது. இதன் முதல் தலைமை ஆசிரியராக ரங்கநாத ஐயர் நியமிக்கப்பட்டார். அதன்பின், இப்பகுதியில் பல மாணவர்களின் எதிர்காலத்தில் இப்பள்ளி அடித்தளமாக இருந்து வருகிறது. இந்நிலையில், முன்னாள் மாணவர்கள் சார்பில், பள்ளியின் நுாற்றாண்டு விழா இரண்டு நாட்கள் நடந்தது. முதல் நாளில், முன்னாள் மாணவர் அப்துல் கலாம் ஆசாத் வரவேற்றார். விழா குழு தலைவர் மற்றும் முன்னாள் ஆசிரியர் ராணி ரங்கசாமி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை கலா ஆண்டறிக்கை வசித்தார். தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இரண்டாம் நாளில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் மாணவர் மோசஸ் வரவேற்றார். முன்னாள மாணவி மற்றும் கூடலுார் நகராட்சி கவுன்சிலரான வெண்ணிலா பேசுகையில், ''இப்பள்ளிக்கு, மாணவர்கள் பள்ளி சென்று வர வசதியாக வாகனம் வழங்கப்படும்,'' என்றார். பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசாக வழங்கப்பட்டது.விழாவில், விழா குழு செயலாளர் காட்வின், பொருளாளர் கிருஷ்ணன், பள்ளி ஆசிரியை பத்மாவதி, கவுன்சிலர் மும்தாஜ், முன்னாள் மாணவர் சபரீசன் உள்ளிட்டோ பங்கேற்றனர்.