உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புத்தாண்டில் இருந்து பார்க்கிங் கட்டணம் வசூல்; பேரக்ஸ் ராணுவ பகுதியில் முதல் முறையாக அமல்

புத்தாண்டில் இருந்து பார்க்கிங் கட்டணம் வசூல்; பேரக்ஸ் ராணுவ பகுதியில் முதல் முறையாக அமல்

குன்னுார்; குன்னுார் வெலிங்டன் பேரக்ஸ் ராணுவ பகுதியில்,புத்தாண்டு தினத்தில் இருந்து, வாகனங்களுக்கு 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.குன்னுார் வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ள, ராணுவ குடும்பத்தினர், சுற்றுலா பயணிகள், தங்களின் வாகனங்களை பேரக்ஸ் நிறுத்தி செல்கின்றனர். இந்நிலையில், வரும், 1ம் தேதியில் இருந்து வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.இதனால், 'இங்கு பொருட்கள் வாங்க வரும் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் மற்றும் மக்கள் பாதிக்கப்படுவர் என்பதால் மறு பரிசீலனை செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தி கன்டோன்மென்ட் முன்னாள் துணைத்தலைவர் வினோத் குமார் தலைமையில் வியாபாரிகள், கன்டோன்மென்ட் வாரிய முதன்மை அதிகாரியிடம் மனு வழங்கினர்.கன்டோன்மென்ட் வாரிய முதன்மை அதிகாரி வினித் பி லோட்டே கூறுகையில், ''ராணுவ பகுதிக்கு வி.ஐ.பி., க்கள் வரும் நேரத்தில் பல வாகனங்கள் நிறுத்தியதால் பல்வேறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, எம்.ஆர்.சி., கேட் முன்பு இரட்டை அடுக்கு கார் பார்க்கிங் தளம்; கனரா வங்கிக்கு முன்புறம், பின்புறம் உள்ள இடத்தையும் பார்க்கிங் தளமாக மாற்ற, போர்டு மீட்டிங்கில் விவாதிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது.வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, வியாபாரிகளுக்கும், கடைகளுக்கு உரிய நேரத்தில் வந்து செல்லும் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு தளர்வு அளிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை