உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உடைந்த நிழற் கூரை; பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அச்சம்

உடைந்த நிழற் கூரை; பஸ் ஸ்டாண்டில் பயணிகள் அச்சம்

குன்னுார்; குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அமைத்த நிழற்கூரை, லாரி மோதி உடைந்து தொங்குவதால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.குன்னுார் பஸ் ஸ்டாண்ட்டில், 1.19 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக, பஸ் ஸ்டாண்டில் உள்ள விடுதி சீரமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் நடந்து வருகிறது. மேலும், பஸ் ஸ்டாண்ட் வெளிப்பகுதியில் நிழற்கூரை பெயரளவிற்கு அமைக்கப்பட்டது. சில நாட்களிலேயே ஒரு பகுதி உடைந்து தொங்குகிறது. இந்த நிழற்கூரை பயணிகள் மீது விழும் அபாயமும் உள்ளது. எனவே, இதனை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ