மேலும் செய்திகள்
சொந்த செலவில் நிழற்குடை அமைத்த கிராம மக்கள்
03-Jun-2025
பந்தலுார்; பந்தலுார் அருகே அத்திமாநகர் பகுதியில், நிழற்குடை இல்லாததால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். உப்பட்டியிலிருந்து அத்திக்குன்னா வழியாக தேவாலா மற்றும் கூடலுார், ஊட்டி, கேரள மாநிலம் மலப்புரம் செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் அத்திமாநகர் பகுதி அமைந்துள்ளது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த வழியாக இரண்டு அரசு பஸ்கள் மற்றும் ஆட்டோ, டாக்சி ஜீப்கள் பயணிகளின் தேவைக்காக இயக்கப்பட்டு வரும் நிலையில், இங்கு கட்டப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடை இடிந்து விழுந்தது. இதனால், தற்போது பயணிகள் வாகனங்களுக்காக காத்திருக்க நிழற்குடை இல்லாத நிலையில் மழையில் நனைந்து இரவில் குளிரில் சிரமபட்டு சாலை ஓரங்களில், நிற்க வேண்டிய அவலம் ஏற்பட்டு உள்ளது. 'மழையின் போது, இடிந்து விழுந்த நிழற்குடையை, ஆய்வு செய்த அதிகாரிகள் உடனடியாக புதிய நிழற்குடை அமைத்து தரப்படும்,' என, உறுதி அளித்தனர். ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நகராட்சி நிர்வாகம் விரைவில் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
03-Jun-2025