உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  சேதமான சாலையில் ஒட்டு போடும் பணி; வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி

 சேதமான சாலையில் ஒட்டு போடும் பணி; வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி

பந்தலுார்: பந்தலுார் பகுதியில் நெடுஞ்சாலைகளை, சீரமைப்பதாக கூறி ஒட்டு போடும் பணியில் ஈடுபடுவதால் வாகன ஓட்டுனர்கள்அதிருப்தி அடைந்து உள்ளனர். கூடலுாரில் இருந்து பந்தலுார் வழியாக உள்ளூர் கிராமங்களுக்கு மட்டும் இன்றி, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கோழிக்கோடு பகுதிகளுக்கும், பந்தலுாரில் இருந்து ஊட்டி, கோவை மற்றும் கர்நாடகா, கேரளா மலப்புரம் பகுதிகளுக்கும் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. அதில், கூடலுார்--கோழிக்கோடு நெடுஞ்சாலை சேதமடைந்து குழிகளாக மாறி வருகிறது. இதனால், கார் உள்ளிட்ட சிறிய வாகனங்களில் வரும், பயணிகள் சிரமப்பட்டு பயணிப்பதுடன், வாகனங்களும் சேதமடைந்து நடுவழியில் நின்று விடுகிறது. இரவில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் இந்த சாலையில், யானைகள் உலா வரும் நிலையில் அச்சத்துடன் இந்த சாலையில் பயணிக்க வேண்டிய நிலை தொடர்கிறது. இந்நிலையில், சேதமான சாலைகளை சீரமைப்பதாக கூறி, நெடுஞ்சாலைத்துறை மூலம் பெயரளவிற்கு, ஜல்லி கற்களை கொட்டி ஒட்டு போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஏற்கனவே சேதடைமந்து காணப்படும் சாலையில், ஜல்லி கற்கள் சிதறி, இருசக்கர வாகன ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் நிலை உருவாகி உள்ளது. இதேநிலை தொடர்ந்தால் வாகன ஓட்டுனர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். எனவே, சாலைகளை தரமாக சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ