உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு பஸ்சை நிறுத்தியதால் மக்கள் பாதிப்பு; தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

அரசு பஸ்சை நிறுத்தியதால் மக்கள் பாதிப்பு; தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

குன்னுார்: குன்னுாரில் பால்மரா லீஸ் பகுதிக்கு, 20 நாட்களாக அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் மக்கள் பணிமனை அலுவலகம் முன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.குன்னுார் அருகே பால் மராலீஸ் பகுதிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதன் சுற்றுப்புற பகுதிகளான, மானார், ஊஞ்சலாடு கோம்பை, மூப்பர்காடு, சாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள், பள்ளி மாணவ,மாணவிகள் இந்த பஸ்சை நம்பி பயணம் செய்கின்றனர்.இந்நிலையில், கடந்த, 20 நாட்களாக காலை, 9:00 மணிக்கு இயக்கிய அரசு பஸ் நிறுத்தப்பட்டது. இது குறித்து புகார் தெரிவித்தும் தீர்வு காணவில்லை. பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.இதை தொடர்ந்து, சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் வினோத், மா.கம்யூ., தாலுகா இடைகமிட்டி செயலாளர் இளங்கோ ஆகியோர் தலைமையில், பொதுமக்கள் பணிமனையில் உள்ள போக்குவரத்து மேலாளரை சந்தித்து புகார் தெரிவிக்க வந்தனர். அங்கு மேலாளர் இல்லாத, நிலையில் தீர்வு காண கோரி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் கூறுகையில், 'காலை நேரத்தில் இயங்கி வந்த அரசு பஸ் இல்லாததால், பல கி.மீ., துாரம் நடந்து வந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. தொழிலாளர்களும் பணிக்கு நடந்தே செல்கின்றனர். இப்பகுதி மகளிருக்கு விடியல் பயணமும் இல்லை. பணம் செலுத்தி பஸ்சில் பயணம் செய்தும் அரசு பஸ் நிறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.அப்போது, அங்கு வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, 'உடனடியாக பஸ் இயக்கப்படும்,' என, உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ