மேலும் செய்திகள்
மீண்டும் மஞ்சள் குடிநீர் வினியோகத்தால் அதிர்ச்சி
16-Apr-2025
பந்தலுார், ; பந்தலுார் பஜார் சுற்றுவட்டார பகுதிகளுக்கு, 'பத்தாம் நம்பர்' கிராமத்தை ஒட்டிய கிணற்றிலிருந்து, நெல்லியாளம் நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்போது கிணற்றில் தண்ணீர் வற்ற துவங்கி உள்ளதால், கால்வாயில் வரும் தண்ணீர் நேரடியாக கிணற்றிற்கு திருப்பிவிடப்பட்டு அந்த தண்ணீர் பொதுமக்களுக்கு குடிநீராக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாசு கலந்த மஞ்சள் நிறத்தில் சேறு கலந்த தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால், உணவு சமைப்பதற்கும், குடிப்பதற்கும் முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது, பந்தலுாரில் மஞ்சள் காமாலை நோய் பரவி வரும் நிலையில், சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்வதால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நேரடியாக ஆய்வு செய்து, சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
16-Apr-2025