உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  புழுதி பறப்பதால் மக்களுக்கு சிரமம்

 புழுதி பறப்பதால் மக்களுக்கு சிரமம்

கோத்தகிரி: கோத்தகிரி பேரூராட்சி, சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 21 வார்டுகளில் ஜல்ஜீவன் மற்றும் அம்ரூத் திட்டங்களின் கீழ், தண்ணீர் வினியோகிக்க ஏதுவாக, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, குழாய்கள் பதிக்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சாலைகளில் குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ளது. நேரு பூங்காவை ஒட்டி, ராம்சந்த் நீரேற்று தொட்டி -நுாலகம் இடையே, குழிகள் மூடப்படவில்லை. இதனால், வாகனங்கள் சென்று வரும்போது, ஒதுங்க முடியாமல் சிரமம் ஏற்படுவதுடன், புழுதி காரணமாக, மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் சாலை குழிகளை விரைவில் தார் போட்டு, சமன் செய்ய நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி