உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குடிநீருக்காக தவியாய் தவிப்பு: மக்கள் கலெக்டரிடம் மனு

குடிநீருக்காக தவியாய் தவிப்பு: மக்கள் கலெக்டரிடம் மனு

ஊட்டி: குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி ஆருகுச்சி பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். ஊட்டி அருகே , தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆருகுச்சி பகுதியில், 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் அமைக்கப்பட்ட ஆள்துளை கிணறு வாயிலாக கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்த நிலையில், பழுது ஏற்பட்டதால் தண்ணீர் வினியோகம் தடைப்பட்டது. தும்மனட்டி ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். குடிநீருக்காக ஊற்றுநீரை தேடி அலைய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இந்நிலையில், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி, நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யாவை சந்தித்து மக்கள் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை