உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களுடன் திரண்ட மக்கள்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களுடன் திரண்ட மக்கள்

பந்தலுார்; பந்தலுார் மற்றும் அய்யன் கொல்லி பகுதிகளில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகா மில், ஏராளமான மக்கள் மனுக்களுடன் குவிந்தனர். பந்தலுார் மற்றும் அய்யன்கொல்லி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. பந்தலுாரில் நடந்த முகாமை ஆர்.டி.ஓ. தனபால், தாசில்தார் சிராஜுநிஷா, ஆணையாளர் சக்திவேல் துவக்கி வைத்தனர். அதில், ஏராளமான மக்கள் பங்கேற்று, அரசு தொகுப்பு வீடு, மருத்துவ உதவி தொகை, சாலை மற்றும் நடைபாதைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து மனுக்களுடன் குவிந்தனர். அதிலும், அதிக அளவிலான பெண்கள் மகளிர் உரிமை தொகை மனுக்களை அளித்தனர். இதேபோல், அய்யன்கொல்லி பகுதியில் கடந்த முகாமிலும் அதிக அளவிலான பழங்குடியினர் பங்கேற்று, குறைகள் குறித்த மனுக்களை அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி