மேலும் செய்திகள்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
13-Jun-2025
கூடலுார்: கூடலுாரில் நடந்த படுகர் நலச் சங்கத்தின், 48வது ஆண்டு விழா பண்பாட்டு ஊர்வலத்தில், படுகர் மக்கள் பாரம்பரிய நடனமாடி அசத்தினர்.கூடலுார் படுகர் நலச்சங்க, 48வது ஆண்டு விழா மற்றும் பண்பாட்டு ஊர்வலம் நேற்று நடந்தது. நகராட்சி அலுவலகம் அருகே, துவங்கிய ஊர்வலத்துக்கு சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ஊர்வலத்தை முன்னாள் தலைவர் கணபதி துவக்கி வைத்தார்.அதில், படுக மக்கள் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடி வந்தனர். ஊர்வலம், ஊட்டி - - மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய பஸ் ஸ்டாண்ட் சென்று, கோழிக்கோடு சாலை வழியாக ஜானகியம்மாள் திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது.தொடர்ந்து, ஆண்டு விழா நிகழ்ச்சிகள் துவங்கியது. சங்க செயலாளர் அம்பி வரவேற்றார். நந்தகுமார் முன்னிலை வகித்தார். அமிர்தா வரவேற்பு நடனம் ஆடினார். சக்கரவர்த்தி கண்ணன், சிவானி, மித்ரா, தரணி ஆகியோர் இறைவணக்க பாடல் பாடினர். பொருளாளர் நகுலன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.மேலும், 2023--24, -25 கல்வி ஆண்டில், 10 மற்றும் பிளஸ்-2 பொது தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 'படுகர் பாரம்பரிய இயற்கை அறிவு' குறித்து தேவேந்திரன் பேசினார். சிவலிங்கம் நன்றி கூறினார்.
13-Jun-2025