துர்நாற்றத்தால் மக்கள் அவதி
கோத்தகிரி: கோத்ததிரி பஸ்நிலையம் அருகே, நுகர்வோர் பண்டகச்சாலை, ரேஷன் கடை, இரண்டு அரசு மருந்தகங்கள் உட்பட, குடியிருப்புகள் நிறைந்துள்ளன. இப்பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் திறந்த வெளியில் கலக்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, கோத்தகிரி நகராட்சி நிர்வாகம் இந்த கால்வாய் மீது மூடி அமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.