உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஊராட்சி பெயரை மாற்ற கலெக்டரிடம் மனு

 ஊராட்சி பெயரை மாற்ற கலெக்டரிடம் மனு

ஊட்டி: 'சமீபத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ஊராட்சியை, கம்பட்டி ஊராட்சியாக பெயர் மாற்ற வேண்டும்,'என, கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். தொதநாடு கம்பட்டி கிராம தலைவர் தலைமையில், சுற்றுவட்டார மக்கள் கலெக்டரிடம் அளித்த மனு: சமீபத்தில், கிராம ஊராட்சிகள் சீரமைப்பு படி, ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு கூடுதலாக, புதிய ஊராட்சிகள் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தும்மனட்டி ஊராட்சி, நான்கு ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டது. அதில், 'பரலட்டி ஊராட்சி' என, அரசாணை வெளியிடப்பட்டது. மக்கள் கருத்து கேட்பின் போது, 'அதிக மக்கள் தொகையுடன், கட்டமைப்பு வசதியுடன் அமைந்துள்ள கம்பட்டி கிராமத்தை தலைமை இடமாக கொண்டு ஊராட்சி அறிவிக்க வேண்டும்,' என, நான்கு ஊர் பொதுமக்கள் ஒருங்கிணைந்து தெரிவித்தனர். ஆனால், பரலட்டி கிராமத்தை தலைமை இடமாகக் கொண்டு ஊராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிக மக்கள் வசிக்கும் மையப் பகுதியான கம்பட்டி கிராமத்தை தலைமை இடமாகக் கொண்டு ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ