மேலும் செய்திகள்
சோ.குப்பம் ஊராட்சியில் பனை விதைகள் நடவு
21-Sep-2026
பந்தலுார்: பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், நெல்லியாளம் நகராட்சி மூலம் பனை விதைகள் விதைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. சமவெளி பகுதிகளில் ஆற்றங்கரைகள் மற்றும் ஏரிக்கரையில் மண்ணரிப்பை தடுக்கவும், பதநீர், நுங்கு, பனங்கிழங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு ஆகிய பொருட்கள் தயாரிப்பதிலும் பனை மரம் முக்கிய பங்கு வகிக்கிறது. சமீப காலங்களில், பெரும்பாலான மாவட்டங்களில் பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும், 6 கோடி பனை விதைகளை நடவு செய்ய கடந்த ஆண்டு அரசு உத்தரவிட்டது. பனை மரங்கள் வளர வறண்ட மற்றும் வெப்பமான காலநிலை தேவைப்படுவதால், நீலகிரியில் இதுவரை பனை மரங்களை வளர்க்கவில்லை. தற்போது, காலநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, 100 பனை விதைகள் விதைக்கும் பணி, 'சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட்' உதவியுடன் முதன் முறையாக, நெல்லியாளம் நகராட்சி சார்பில் பந்தலுாரில் துவங்கியது. அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுஜித் கூறுகையில்,''மாவட்டம் முழுவதும், 2,000 பனை விதைகளை விதைக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.
21-Sep-2026