உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டியில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ரூ. 1 லட்சம் அபராதம்; கடைக்கு சீல்

ஊட்டியில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ரூ. 1 லட்சம் அபராதம்; கடைக்கு சீல்

ஊட்டி; ஊட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடை உரிமையாளருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.நீலகிரியின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில் ஒருமுறை பயன்படுத்தப்படும், 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலில் இருந்து வருகிறது.வாகன சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் நடந்தாலும், புழக்கத்தில் இருப்பதால் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது.கடந்த ஒரு வாரமாக கலெக்டர் உட்பட வருவாய் துறையினர், நகராட்சி அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெளி மாநிலத்திலிருந்து, நீலகிரி வரும் வாகனங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடையில் நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு தலைமையில் திடீர் ஆய்வு நடந்தது. கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில், ''நகராட்சி மார்க்கெட் கடையின் உரிமையாளருக்கு சொந்தமான இரு வாகனங்களில், விற்பனைக்காக வைக்கப்பட்ட, 230 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து ஆனந்த் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை