உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / குன்னுார் ரயிலில் போலீசார் திடீர் ஆய்வு: போதை வஸ்து குறித்து தீவிர சோதனை

குன்னுார் ரயிலில் போலீசார் திடீர் ஆய்வு: போதை வஸ்து குறித்து தீவிர சோதனை

குன்னுார்: ரயிலில் சட்ட விரோத பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க, குன்னுார் ரயில் நிலையத்தில், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து, குன்னுார் ஊட்டிக்கு இயக்கப்படும் மலை ரயிலில், சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், ரயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் ரயில்களில் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வப்போது கஞ்சா உட்பட போதை வஸ்துக்கள் பிடிபட்டதுடன், பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, மதுரையில் ரயிலில் சமையல் செய்யும் காஸ் பயன்படுத்தி சமைத்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு நடந்துள்ளது. இது போன்ற சம்பவங்களை தவிர்க்கவும், ரயிலில் சட்ட விரோத பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்கவும் ரயில்வே போலீசார் சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், குன்னூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் சப்---இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். சுற்றுலா பயணிகளுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். போலீசார் கூறுகையில், 'ரயிலில் சட்ட விரோத பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி