உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊழல் தடுக்க விழிப்புணர்வு ஊட்டியில் போலீசார் ஏற்பாடு

ஊழல் தடுக்க விழிப்புணர்வு ஊட்டியில் போலீசார் ஏற்பாடு

ஊட்டி, ; -நீலகிரியில் விஜிலென்ஸ் வாரத்தை ஒட்டி போலீசார் சார்பில், ஊழல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.ஆண்டுதோறும் அக்., 28ம் தேதி முதல் நவ., 3 ம் தேதி வரை விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், ஊட்டி விஜிலென்ஸ் போலீசார் சார்பில், ஊட்டி உழவர் சந்தை பகுதியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மாவட்டத்தில் குன்னுார், கோத்தகிரி, கூடலுார் பகுதிகளிலும் விஜிலன்ஸ் போலீசார் சார்பில், பள்ளி கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.அதில் பள்ளி, கல்லுாரி மாணவர்களை ஒருங்கிணைத்து ஊழல் தடுப்பு குறித்து கருத்தரங்கம், பட்டிமன்றம்,வினாடி-வினா போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ