உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பைக் நிறுத்தும் போலீசார் மக்கள் நடமாட சிரமம்

பைக் நிறுத்தும் போலீசார் மக்கள் நடமாட சிரமம்

குன்னுார்: குன்னுார் 'லெவல் கிராசிங்' பகுதியில், போக்குவரத்து போலீசார் தங்கும் அறை உள்ளது. இதன் முன்புறம் 'பேரிகாட்' வைத்து அவ்வப்போது இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் நிறுத்தி செல்கின்றனர்.மேட்டுப்பாளையம், ஊட்டி, ஓட்டுப்பட்டறையில் இருந்து வரும் வாகனங்கள், லெவல் கிராசிங் பகுதியில் இருந்து குன்னுார் பஸ் ஸ்டாண்ட் செல்கின்றன. இதே போல, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் இறக்கி விடப்படும் பயணிகள் இவ்வழியாக பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு நடந்து செல்கின்றனர். இந்நிலையில், இங்கு இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார் நிறுத்தி செல்வதால் மக்கள் நடமாட சிரமம் ஏற்படுகிறது. மேலும் வாகனங்களில் பாதசாரிகள் சிக்கி, விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. 'இப்பகுதியில் போலீசார் இரு சக்கர வாகனங்களை நிறுத்த கூடாது,' என, போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது, மீண்டும் இந்த பகுதியில், பேரிகாட் வைத்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மக்கள் கூறுகையில்,'இப்பகுதியில் பாதிப்புகள் ஏற்படும் முன்பு, இங்கு இரு சக்கர வாகனங்களை நிறுத்த தடை விதிக்க போலீஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ