உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பந்தலுாரில் பொங்கல் விழா; போட்டியில் மக்கள் ஆர்வம்

பந்தலுாரில் பொங்கல் விழா; போட்டியில் மக்கள் ஆர்வம்

பந்தலுார்; பந்தலுாரில் நடந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில், அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் இடம் பெற்றன. பந்தலுாரில் பொங்கல் விழா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு நடந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கான பானை உடைத்தல், கயிறு இழுத்தல்; இளைஞர்களுக்கான வழுக்கு மரம் ஏறுதல், சிறுவர்களுக்கான வாழைமரம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. அதில், அனைத்து தரப்பு மக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமையை வெளி காட்டினர். மேலும், இளைஞர்கள் பலர் ஓடு உடைத்தல், சிலம்பம் சுற்றுதல், தீப்பந்தம் சுழற்றுதல் போன்ற சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த மதுரை முனைவர் மதிச்சியம் பாலா தலைமையில் கிராமிய தெம்மாங்கு இசை கச்சேரி அனைவரையும் கவர்ந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஸ்ரீ விவேகானந்தர் இளைஞர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ