மேலும் செய்திகள்
ஊட்டி உருளைக்கிழங்கு விலை உயர்வு
20-May-2025
ஊட்டி உருளைக்கிழங்கு வரத்து சரிவு
27-May-2025
குன்னுார்: நீலகிரியில் விளையும் உருளை கிழங்கிற்கு விலை அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குன்னுார், ஊட்டி, குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உருளைக்கிழங்கு விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் விலை அதிகரித்து இருந்த நிலையில், தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டு வந்தது.தற்போது, மீண்டும் விலை உயர துவங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் ஏல மையத்தில், 45 கிலோ அடங்கிய மூட்டை அதிகபட்சமாக, 2,160 ரூபாய் கிடைத்துள்ளது. பொடி உருளை கிழங்கு, 310 ரூபாய் என குறைந்தபட்சமாக இருந்தது.கடந்த மாத இறுதியில் மழையின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் அறுவடை குறைந்து இருந்ததால், விலை அதிகரித்து காணப்பட்டது. தற்போது, விலை மேலும் அதிகரித்து வரும் நிலையில், உருளைக்கிழங்கு அறுவடை செய்ய விவசாயிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
20-May-2025
27-May-2025